Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா

View previous topic View next topic Go down

ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா

Post  ishwarya on Fri May 24, 2013 12:37 pm



ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழாதிருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், கோயில் இணை செயல் அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு தலைமை தாங்கி பேசியதாவது: ரத சப்தமியையொட்டி ஒரே நாளில் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி மற்றும் உற்சவ மூர்த்தி வீதி உலா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும். 17-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும், பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை சக்கர ஸ்தானமும், தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது. விழாவையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். ரத சப்தமி அன்று அதிகாலை 3.30 மணிக்கு விஐபி பிரேக் தரிசனம் நடக்கும். முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum