Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


நோய் தீர்க்கும் வண்ணங்களும் பரிகாரங்களும்

View previous topic View next topic Go down

நோய் தீர்க்கும் வண்ணங்களும் பரிகாரங்களும்

Post  ishwarya on Fri May 24, 2013 12:41 pm

விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் சூரிய ஒளியை முப்பட்டைக் கண்ணாடிவழியாகச் செலுத்தி வயலட், இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களைப் பிரித்து தனித்தனி வண்ணங்களாக ஒளிவிட்டு பிரகாசிப்பதை உலகுக்குக் காட்டினார். நமது சித்தர்களும், மகான்களும் பாதரசத்தை மணியாகக் கட்டி ரசமணியாக தயாரித்து பலவிதமான நோய்களைத் தீர்ப்பதற்கும் பல சித்துக்களை அடைவதற்கும் உபயோகித்து வந்த தாக ரசவாத நூல்கள் கூறுகின்றன.

நமது சரீரத்தில் நோய்கள் ஏற்படும் போது முப்பட்டைக் கண்ணாடியில் நமது உருவத்தை புகைப்படத்தில் பார்த்தால் ஒரு வண்ணம் மங்கலாக இருப்பது தெரியவரும். ஆகவே வண்ணப் பற்றாக்குறையே உடலில் நோய்களை ஏற்படுத்துகிறது. உடலில் ஏற்பட்டு இருக்கும் வண்ணப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்தால் நமது நோய்கள் தீருகின்றன. குரோமோ தெரபி என்பது வண்ண மருத்துவம் ஆகும்.

நவக்கிரகங்களும் காஸ்மிக் வண்ண ஒளிக்கதிர்களை, பரப்பிக் கொண்டிருக்கின்றன. கிரகங்களுக்கு உரிய வண்ணங்கள் கீழ் வருமாறு : சூரியன்- சிவப்பு சந்திரன்- ஆரஞ்சு புதன்- பச்சை செவ்வாய் - மஞ்சள் குரு- நீலம் சுக்ரன்- இண்டிகோ சனி- வயலட் ராகு- அல்ட்ரா வயலட் கேது- இன்ப்ரா ரெட் மனிதனது எண்ணங்களினால் அவனது நல்லது, கெட்டதுக்கு ஏற்ப வண்ணங்களும் உடலில் மாறுபட்டு இருக்கின்றன.

இது இயற்கை நியதியாகும். சிவப்பு வண்ணம் உடலில் 'லிவர்' என்னும் ஈரல் பகுதியை சரிவர இயங்கச் செய்கிறது, எலும்புகளைப் பலப்படுத்துகிறது. தலைச்சுற்றல், மயக்கம் போன்ற வியாதிகளை குணப்படுத்துகிறது. இதன் அதிபதி கிரகம் சூரியன் ஆகும். சூரிய தெசா, புக்தி காலங்களில் சிவப்பு வர்ணத்தை உபயோகித்து வர சரீரம், ஆத்ம வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.

தற்காலத்தில் ஆறா ஒளிவட்ட ஆய்வக கருவி மூலம் அறிய முடிகிறது. ஒவ்வொரு தெசா புக்தி காலங்களிலும் வண்ணப் பற்றாக்குறையை இக்கருவி மூலம் அறிய முடிகிறது. அதற்கேற்ப பரிகாரம் செய்ய நற்பலன் விளைகிறது. இதனையே தான் நம் முன்னோர்கள் கிரகப் பரிகாரம் என்ற ரீதியில், பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லி வந்துள்ளனர். ஆரஞ்சு வண்ணம் சந்திரன் ஆதிக்கமாகும்.

உடலுக்கு தேவையான பிராண சக்தியை தருகிறது. நுரையீரல், தைராய்டு சுரப்பி கோளாறுகளை ஆரஞ்சு வண்ணக் கதிர் குணப்படுத்துகின்றது. மஞ்சள் வண்ணம் இருதயத்தை பலப்படுத்தி அதன் உறுப்புகளுக்கு சக்தியைக் கொடுத்து இருதயம் நன்கு இயங்க உதவுகிறது. லிவர், கால் பிளாடர்களின் இயக்கத்தையும் பலப்படுத்துகிறது.

மஞ்சள் வண்ணம் டயபடீஸ் (நீரிழிவு) வராமல் தடுக்கிறது. பான் கிரியாஸ் சுரப்பியையும் சரிவர இயக்குகிறது. பச்சை வண்ணம் பிட்யூட்டரி சுரப்பிகளை சரிவர இயங்க வைக்கின்றன. வண்ணத்தில் ஜீவசக்திகள் அதிகம் கொண்டது பச்சை கதிர்களேயாகும். நோயை அண்டவிடாது. கேன்சர் நோய் தீர பச்சை வண்ணம் உபயோகமாகிறது. புதன் ஆதிக்கம் செலுத்துகிறது. நீல வண்ணம் குருவால் ஆளப்படுகிறது.

பீனியல் சுரப்பியின் வண்ணமும் நீலம் தான். ஆத்மாவின் வண்ணம் நீலம் என்று ஸ்டான்ஸி பர்ரோஸ் என்ற இயற்கை மருத்துவ நிபுணர் கூறுகிறார். நெற்றிக் கண் திறந்ததும் நீல ஒளிதான் சிரசினுள் தெரியும் என யோக நூல்கள் கூறுகின்றன. நீல வண்ணம் தொண்டைப் பகுதி, உடலில் எரிச்சல், அரிப்பு போன்ற நோய்களை தீர்க்கிறது.

நரம்பு கோளாறு, வாதம், வலிப்பு, மூச்சுக் குழல் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கிறது. இண்டிகா வண்ணம் சுக்ரனால் ஆளப்படுகிறது. இது அற்புதமான கிருமி நாசினி ஆகும். நிமோனியா, மனக் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், முகஜன்னி, இருதய நோய்களை தீர்க்கிறது. வயலட் சனியின் ஆதிக்கத்தில் வருகிறது. மண்ணீரல் செயல்பாட்டை இது தூண்டுகிறது.

ரத்தம் சுத்தியாகி ரத்த ஓட்டம் சீர்பட்டு, ஜீவ அணுக்களை உற்சாகப்படுத்துகிறது. அல்ட்ரா வயலட் ராகுவின் ஆதிக்கமாகும். பசியைத் தூண்டுகிறது. விஷக்கடியில் இருந்து காப்பாற்றுகிறது. குடல், வயிறு உபாதைகளை நீக்குகிறது. மன பாதிப்புகளை நீக்குகிறது. இன்பரா ரெட், கேது கிரக ஆதிக்கமாகும்.

கேன்சர் கட்டிகள், கொப்பளங்கள் போன்றவைகளை குணமாக்குகின்றன. நரம்பு பிடிப்புகள் நீங்க சிவப்பு வண்ண ஆடைகளை அணியலாம். சிவப்பு பட்டுக் கயிற்றை மணிக்கட்டில் (அல்லது) கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். நரம்பு பிடிப்பை தரக்கூடிய கிரகம் ராகு ஆகும். சிவப்பு வண்ண கதிர்கள் உடலில் பாய்வதால் இந்த நோயின் கடுமை குறையும். மெஜந்தா வண்ணம் சீக்கிரம் உணர்ச்சி வசப்படுவதை தடுக்கிறது. மனதை அமைதிப்படுத்துகிறது.

கோபத்தை அடக்குகிறது. இருத யத்தை சுத்தப்படுத்தி பலப்படுத்துகிறது. ஆழ்நிலை தியானம் செய்பவர்கள் பர்ப்பிள் வண்ண விளக்கு ஒளியில் தியானம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. நிம்மதியான தூக்கம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது.

இந்த பர்ப்பிள் வண்ணம், சிறுநீரகத் தையும் சரிவர இயக்கி வைக்கிறது. வயலட் கலர் மண்ணீரல் செயலை வலுப்படுத்துகிறது. வண்ணங்களில் எண்ணங்களைப் பதிப்போம். நோய் நீங்கி வளமோடு வாழ்வோமாக. 'ஜோதிட ஞான சிரோன்மணி' கடகம் ராமசாமி, சமயபுரம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum