Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தவிட்டுக்கும், கருப்பட்டிக்கும் பிள்ளைகளை விற்கிறார்கள்!

View previous topic View next topic Go down

தவிட்டுக்கும், கருப்பட்டிக்கும் பிள்ளைகளை விற்கிறார்கள்!

Post  ishwarya on Fri May 24, 2013 12:52 pm

குறுக்குத்துறை முருகன் கோயில், தாமிரபரணி ஆற்றின் கரையில் அழகாக காட்சியளிக்கிறது. கோயிலை தொட்டபடி செல்லும் ஆறு, முருகனின் பாதம் தொட்ட சிலிர்ப்புடன் சலசலத்துச் செல்கிறது. தாமிரபரணி தண்ணீர்தான் இப்பகுதியில் அனைத்துக் கோயில் கருவறை மூர்த்திகளின் அபிஷே கத்துக்குப் பயன்படுகிறது. ஆனால், தாமிரபரணியே வருடந்தோறும் ஒரு கோயிலையே அபிஷேகம் செய்கிறது என்றால், அது இந்த குறுக்குத்துறை முருகன் கோயில்தான். ஆம், அடை மழை காலங்களில் தாமிரபரணியின் வெள்ளம் கோயிலை மூழ்கடித்து விடுகிறது! இந்தச் சமயத்தில், இங்குள்ள உற்சவர் சிலைகளை மேலக்கோயிலுக்கு எடுத்துச் சென்று விடுவார்கள்.

பழனிக்கும், திருச்செந்தூருக்கும் ஒரே நேரத்தில் செல்வது கடினம் என்பார்கள். ஆதலால், குறுக்குத்துறை முருகன் கோயிலுக்கும், மேலக்கோயிலுக்கும் சென்று வந்தால் பழனிக்கும், திருச்செந்தூருக்கும் சென்ற புண்ணியம் கிட்டும் என்றும் சொல்வார்கள். திருச்செந்தூர் முருகன் கோயில் தோன்றிய காலத்திலேயே குறுக்குத்துறை முருகனின் மேலக்கோயில் தோன்றியுள்ளது. அதற்குக் காரணம், குறுக்குத்துறையில் உள்ள கற்கள். இந்த இடத்துக்கு திருவுருமாமலை என்று பெயர். இங்குள்ள கற்கள் சிலை வடிக்க ஏற்றவை. திருச்செந்தூர் மூலவர் சிலை இங்குதான் உருவாக்கப்பட்டது. அப்போது, ஒரே மாதிரியான இரண்டு சிலைகளை உருவாக்கி, ஒன்றை திருச்செந்தூர் கருவறையிலும், மற்றொன்றை குறுக்குத்துறை மேலக்கோயில் கருவறையிலும் வைத்து வணங்கி வருகிறார்கள்.

இங்கிருந்த பாறையில் முருகன் சிலை வடிக்கப்பட்டு திருச்செந்தூர் சென்றதால், இந்த கோயிலை திருச்செந்தூரின் தாய்வீடு என்றழைக்கிறார்கள். திருவுருமாமலை என்ற குறுக்குத்துறை பாறையில் ஒரு முருகன் சிலை வள்ளி-தெய்வானையுடனான முருகன் சிலையை செதுக்கப்பட்டது. ஆனால், இந்தச் சிலையை பாறையிலிருந்து பிரித்து எடுக்க முடியாமல் சிற்பி அப்படியே விட்டுவிட்டார். ஆனாலும் இந்தச் சிலையை மக்கள் வழிபட்டு வந்தார் கள். இந்த சிலை வெயில் பட்டு, மழை பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் கிடந்தது. அந்தக் காலத்தில் இந்த பகுதியில் தண்ணீர்த் துறை எதுவும் கிடை யாது. திருநெல்வேலி மக்களுக்கு சிந்துபூந்துறை மட்டுமே சிறந்த துறையாக விளங்கியது. ஆனால், ஒரு சிலர் இங்கு நீராட வருவதுண்டு.

அப்படித் தான் வடமலையப்ப பிள்ளை என்ற பெரிய சீமானின் தாயார் இந்தத் துறையில் வந்து நீராடினார். அப்போது அந்த அழகான முருகனின் சிலையைப் பார்த்தார். வெயிலாலும், மழையாலும் சிலை சேதமுறாமல் இருக்க, ஓலையால் நிழல் அமைத்தார். அவர் தினமும் பக்தியுடன் தாமிரபரணியில் நீராடி முருகப் பெருமானுக்கும் நீராட்டி மலர் சூட்டி வணங்கினார். இதைக்கண்டு பிற அனைவரும் வணங்க ஆரம்பித்தனர். கோயிலில் பல அற்புதங்கள் நிக ழத் தொடங்கியது. திருவாவடுதுறை ஆதீனத்தார் இக்கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று விரிவாக்கினார்கள். ஆகம விதிப்படி கர்ப்ப கிரகம், முன்மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றை உருவாக்கினார்கள். தற்போது கோயில் மிகச் சிறப்பாக விளங்குகிறது.

இதுவொரு குடவரைக்கோயில் - திருச்செந்தூர் வள்ளி குகைபோல. கோயில் கர்ப்ப கிரகத்தில் பஞ்ச மூர்த்திகள், தம்பதி சகிதமாகக் காட்சி தருகிறார் கள். தாமிரபரணிக்கு வெகு அருகிலே உள்ளதால் நீராழி மண்டபம் நீர் வற்றாமல் இருக்கிறது. ஒரு அன்பர் தன் தந்தையின் அஸ்தியை கலசத்தில் எடுத்துக் கொண்டு, புண்ணிய தீர்த்தம் தேடி அலைந்துள்ளார். காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று அஸ்தியை கரைத்தார். ஆனால் ஏனோ மனதில் நிறைவில்லை. தாமிரபரணியில், கருப்பன் துறையில் கரைத்த போது, வெண்மையான அஸ்தி கருமை நிறமானது. குறுக்குத்துறைக்கு வந்தபோது, அஸ்தி குருத்து விட்டது. சிந்து பூந்துறையில் கரைக்க முற்பட்ட போது, மலர்களாகப் பூத்துவிட்டதாம். ஆகவே உலகத்தில் உள்ள அனைத்து தீர்த்தக் கட்டங்களிலும், இந்த கோயிலுக்கு அருகேயுள்ள மூன்று தீர்த்தக் கட்டங்களை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறுகிறார்கள்.

கடுமையாக தவம் இயற்றினால் முக்தி அடையலாம் என்று சொல்வார்கள். ஆனால், குறுக்குத்துறை கோயிலை வலம் வந்து வணங்கி நின்றாலே முக்தி கிடைக்கும். அதனால்தானோ என்னவோ இந்தக் கோயிலை குறுக்கு(வழி)த்துறை என்றழைக்கிறார்கள் போலிருக்கிறது! திருச்செந்தூர் முருக னுக்கு நேர்ந்து கொள்வதை நிறைவேற்ற முடியாதவர்கள் குறுக்குத்துறையில் வந்து நிறைவேற்றலாம். கோயில் கிழக்கு பார்த்து உள்ளது. உள்ளே நுழைந்தால் பிள்ளையாரும், பாலசுப்பிரமணியரும் வரவேற்கிறார்கள். அடுத்து அணிக்கை விநாயகர், வீரபாகு, வீர மகேந்திரர் காட்சி தருகின்றனர். அவர்களைத் தாண்டி கருவறையில் சுயம்பு சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானையுடன் காட்சி தருகிறார். தாமிரபரணியில் வெள்ளம் வரும்போது, அந்த அபிஷேகத்தில் அப்படியே மூழ்கிக் கிடப்பார் இவர்.
அருகிலேயே நெல்லையப்பர், காந்திமதி, சொக்கர், மீனாட்சி, நடராஜர், சிவகாமி சந்நதிகள் உள்ளன. ஆறுமுக நயினார் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அருகிலேயே ஷண்முகர் வள்ளி-தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவர்களை தரிசித்துவிட்டு பாறையில் குடையப்பட்ட உள்சுற்று வழியாக வந்தால் பஞ்சலிங்க மூர்த்திகள் அம்பாளோடு காட்சி தருகிறார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து செவ்வாய்க்கிழமைகளில் பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாத்தினால் தடை நீங்கும். குழந்தைகளுக்கு தோஷம் இருப்பதாக கருதுபவர்கள் குழந்தையை தவிட்டுக்கும், கருப்பட்டிக்கும் முருகன் முன்னால் வந்து விற்று, பிறகு வாங்கிச் செல்வார்கள். இக்கோயிலில் தைப் பூசம், மாசி அமாவாசை இரண்டும் மிக விமரிசையாக கொண்டாடப்படும்.

மாசி அமாவாசை அன்று பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. ஆறு வருடங்களுக்கு ஒருமுறை இந்த நாளில் லட்ச தீபம் ஏற்றப்படும். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்தும், டவுன் ரயில் நிலையத்தில் இருந்தும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பஸ், ஆட்டோ வசதி உண்டு. கோயில் காலை 6 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத் தொடர்புக்கு: 0462 -2940147

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum