Related Posts Plugin for WordPress, Blogger...

கூந்தல் அலங்காரத்தில் புதுமை

View previous topic View next topic Go down

கூந்தல் அலங்காரத்தில் புதுமை

Post  ishwarya on Fri May 24, 2013 1:29 pm

கூந்தல் அலங்கார புதுமை சிகிச்சைகளில் ஸ்டிரைட்டனிங், வேல்வ்யூமைசிங்,
ஸ்மூத்தனிங் போன்ற பல வகைகள் உண்டு. அவற்றில் புதிய டிரண்ட்டாக
உருவாகியிருப்பது, ‘பெர்மிங்’. விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் விருந்து
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தற்காலிகமாக கூந்தலை
சுருளாக்கிக்கொள்வது ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த வகை. பெர்மிங் என்பது
நிரந்தரமாக கூந்தலை சுருளாக்கிக்கொள்வது.


பழைய கூந்தல் அலங்காரங்களை புறந் தள்ளிவிட்டு, இப்போது பெர்மிங்தான்
புதுமை படைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தடவை பெர்மிங் செய்தால், ஒரு
வருடத்திற்கு மேலாக கூந்தல் சுருள்சுருளாக காட்சியளிக்கும். நீண்ட
கூந்தலைக் கொண்டவர்களுக்கு பெர்மிங் அதிக அழகுதரும். சிலருக்கு குறைந்த
அளவு முடியே இருக்கும்.


அவர்கள் நிறைய முடி இருப்பதுபோல் காட்டிக்கொள்ள ‘ரூட் பெர்மிங்’
செய்துகொள்ளலாம். கூந்தலுக்காக எந்த சிகிச்சையும் செய்துகொள்ளாமல் ஹென்னா
செய்துகொள்ளும் கூந்தலுக்கு பெர்மிங் அதிக பலன் தரும். ஒருமுறை பெர்மிங்
செய்ய இரண்டரை மணி போனது.. இது வந்தது.. சுருள்கள் நீங்கக்கூடும். அதனால்
விரல்களை பயன்படுத்தி நேரமாகும்.


பெரும்பாலும் கூந்தலின் நுனிப்பகுதியிலே பெர்மிங் செய்யப்படுவதால்,
அதில் கலந்திருக்கும் ரசாயனம் தலைப்பகுதியில் படாமல் தவிர்க்கப்படும். ரூட்
பெர்மிங் மிக கவனமாக செய்யப்படுவதாகும். பெர்மிங் செய்த முடியில் சீப்பு
உபயோகித்து சீவினால், அதன் சுருள்கள் நீங்கக்கூடும்.


அதனால் விரல்களை பயன்படுத்தி சிக்குகளை சரிசெய்து, நீவிவிட்டு கூந்தலை
பராமரிக்கவேண்டும். சீரம் கண்டிஷனர் பயன்படுத்துவது பெர்மிங் செய்த
கூந்தலுக்கு நல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum