Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


திருமாவளவன் ஒட்டுமொத்த தலித்துகளின் தலைவர் அல்ல : ராமதாஸ்

View previous topic View next topic Go down

திருமாவளவன் ஒட்டுமொத்த தலித்துகளின் தலைவர் அல்ல : ராமதாஸ்

Post  ishwarya on Fri May 24, 2013 2:59 pm

G


















பாமக
நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: மரக்காணத்தில் நடந்த
கலவரம் திருமாவளவனால் ஒரு வாரத்துக்கு முன்பு திட்டமிடப்பட்டு, விடுதலை
சிறுத்தைகள் கட்சியினரால் அரங்கேற்றப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டியவர்கள்
விவரம் எங்களிடம் உள்ளது. மாமல்லபுரம் நோக்கி வந்த பாமகவினர் வாகனங்களை
திரும்பி போகச் சொல்லி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த போலீஸ் எஸ்.பி.
மனோகரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில்
வன்னியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


மரக்காணத்தில் நடந்த கலவரத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். எல்லா
சேதமும், பாதிப்பும் வன்னியருக்குத்தான். ஆனால், திருமாவளவன் கோயபல்ஸ்சை
மிஞ்சும் அளவுக்கு வன்னியர்கள் தான் கலவரம் செய்தார்கள் என்று குற்றம்
சாட்டி வருகிறார். என்ன நடந்தது என்பதை அரசு விசாரித்து மக்களுக்கு
தெரிவிக்க வேண்டும்.


திருமாவளவன் ஒட்டு மொத்த தலித்துகளுக்கு தலைவர் கிடையாது. விடுதலை
சிறுத்தைகள் கட்சி தலித்துகளுக்கான அமைப்பும் கிடையாது. தலித் அமைப்புகள்
32 அமைப்புகளாக பிரிந்து உள்ளன. நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரிகள்
அல்ல. தீண்டாமையை ஆதரிக்க மாட்டோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.


என் மகனை எம்.பி. ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலவரத்தை தூண்டுவதாக
திருமாவளவன் கூறி உள்ளார். நாங்கள் 2011ம் ஆண்டிலேயே எந்த கட்சியுடனும்
கூட்டணி அமைக்க மாட்டோம், தனித்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று முடிவு
எடுத்துள்ளோம். எங்களை குறை சொல்லும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒன்றை
சொல்ல விரும்புகிறேன். மரக்காணம் கலவரத்தில் வன்னியர்களுக்குத் தான் அதிக
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரக்காணம் கலவரம் பற்றி சிபிசிஐடி விசாரணை நடத்த
வேண்டும். சிபிஐ விசாரணை நடத்தினாலும் நல்லது தான்.


வன்னியர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு
செய்யவில்லை. முதல்வர் எங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum