Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இரு பிரிவினர்களுக்கு இடையே மோதலை உருவாக்கி கலவரத்தை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை

Go down

இரு பிரிவினர்களுக்கு இடையே மோதலை உருவாக்கி கலவரத்தை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை

Post  ishwarya on Fri May 24, 2013 4:33 pm

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கடந்த 25ம் தேதி பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின்போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது; பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): மரக்காணம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கவலை அளிக்கிறது. இந்த சம்பவத்தால் அரசு பஸ், தனியார் வாகனங்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசை வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. முதல்வர் சாதியை பார்க்க மாட்டார்,

நீதியைத்தான் பார்ப்பார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக இதுபோன்ற வெறுப்பு பிரசாரம் தொடர்ந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழகத்தில் மீண்டும் சாதி கலவரத்தை தூண்டும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மரக்காணத்தில் நடந்த சம்பவம் திட்டமிட்டு நடந்த தாக்குதலாகும். தவறு செய்த அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலில் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சாதியை பயன்படுத்துகிறார்கள்.

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): தமிழகத்தில் சாதிகள் பல இருந்தாலும் அவர்களுக்குள் மோதிக் கொள்ளும் பாரம்பரியம் இல்லை. ஆனால், அதற்கான சூழ்ச்சி தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கலவரத்தை தூண்டியவர்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குரு (பாமக): மாநாட்டுக்கு வந்த எங்கள் மக்கள் 2 பேரை இழந்திருக்கிறோம். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். பல வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. (தொடர்ந்து சில கருத்துகளை பற்றி பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.) முதல்வர் ஜெயலலிதா (குறுக்கிட்டு): உறுப்பினர் பல குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார். அங்கு நடந்தது விபத்தா அல்லது கொலையா என்று இவர் கூற முடியாது. இதுபற்றி காவல் துறைதான் விசாரித்து முடிவு செய்யும். இவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்த பின்னர் எதற்காக அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இதுவரை பேசிய யாரும் பாமக மீது குற்றம் சாட்டவில்லை. ஆனால் இவர், எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்று பேசுகிறார்.

பேரவை தலைவர் தனபால்: அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மட்டும் பேசுங்கள் அல்லது உட்காருங்கள். தன்னிலை விளக் கம் மாதிரி பேச முடியாது. அப்படி பேசுவதாக இருந்தால் வெளியில் பேசுங்கள். மேடையில் பேசுவது போன்று இங்கு பேச முடியாது, இது சட்டமன்றம். அமைச்சர் பன்னீர்செல்வம்: பாதிப்பு எல்லாருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த பாதிப்பு யாரால், எப்படி ஏற்பட்டது என்பது காவல் துறை விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றம் கொண்டு செல்லப்படும். அதன் பிறகுதான் தெரியும்.

குரு: தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தனி நீதிபதி விசாரணை என்றாலும் சரி அல்லது சிபிசிஐடி, சிபிஐ உள்ளிட்ட எந்த விசாரணையாக இருந்தாலும் சரி, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். விசாரணை யில் நாங்கள்தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயாராக உள்ளோம்.

ஜவஹருல்லா (மமக): மேடைகளில் ஆவேசமாக பேசி உணர்ச்சியை தூண்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): பாமக மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர் நீதிமன்ற நிபந்தனைகளுடன் மாநாடு நடந்தது. அனைத்து விதிமுறைகளை மீறி மாநாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார். சில மாதங்களாக எங்கோ நடந்த சம்பவத்தை முன்வைத்து திட்டமிட்டு செய்து வருகின்றனர். சரத்குமார் (சமக): மேடையில் பேசுகிறவர்கள் நாகரிகமாக பேசவேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு உண்டு. சாதி கலவரத்துக்கு அடித்தளமே உணர்ச்சிவசமாக பேசுவதுதான். சாதியை தூண்டும் வகையில் பேசாமல் இருந்தால் நாடு சிறப்பாக இருக்கும். சாதி கலவரத்தை தூண்டுபவர்களை கண்காணிக்க வேண்டும். செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி): தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகள் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் பெண்கள். இவர்கள் எப்படி திருப்பி தாக்க முடியும். சாதி உணர்வுகளை அரசியலாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவ்வாறு பேசினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum