Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


திருமாவளவன் விஜயகாந்துடன் சந்திப்பு

View previous topic View next topic Go down

திருமாவளவன் விஜயகாந்துடன் சந்திப்பு

Post  ishwarya on Fri May 24, 2013 4:37 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். ''மரக்காணம் கலவரம் சம்பந்தமாக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவேன்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியை, திருமாவளவன் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலை வர் விஜயகாந்தை, திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்த அறிக்கையை அவரிடம் அளித்தார். இச்சந்திப்பின் போது, தேமுதிக அவை தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்தி ரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் சிந்தனை செல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், செய்தி தொடர் பாளர் வன்னியரசு, தகடூர் தமிழ்ச் செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், பாலசிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆகியோரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum