Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இரட்டை சேவை வரியை கண்டித்து ஓட்டல்கள் அடைப்பு

Go down

இரட்டை சேவை வரியை கண்டித்து ஓட்டல்கள் அடைப்பு

Post  ishwarya on Fri May 24, 2013 4:39 pm

கடலூர் மாவட்ட ஓட்டல்கள் சங்க செயலாளரும், ஆனந்தபவன் குரூப்ஸ் உரிமையாளருமான ஆர்.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உணவக வாடிக்கையாளர்கள் தாங்கள் உண்ணும் உணவின் மீது விற்பனை வரி செலுத்தி வருகிறார்கள். ஆனால் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மத்திய அரசு குளிர்சாதன வசதி (ஏ.சி.) கொண்ட உணவகங்கள் மீது சேவை வரியை விதித்துள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பின் சுமை ஏற்கனவே விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள உணவக வாடிக்கையாளர்கள் மீதுதான் விழும்.

நடுத்தர மக்கள் குளிர்சாதன (ஏ.சி.) ஹாலில் உணவருந்தும் சொற்ப சந்தோஷமும் பறிக்கப்படுகின்றது என்பது மிகவும் வேதனைக்குரியதாகும். ஓட்டல் உணவின் மீது முழுமையாக விற்பனை வரி விதிக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.

அதே விற்பனை நடவடிக்கையை சேவை என வகைப்படுத்தி மத்திய அரசு சேவை வரி விதித்துள்ளது. இது தொடர்பாக தெளிவாக கூற வேண்டு மானால் 100 ரூபாய்க்கு உணவு உண்னும் வாடிக்கையாளர்கள் 140 ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டும். இவ்வாறு இரட்டை வரி விதிப்பது அரசியமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

இந்த வரி விதிப்பை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். இரட்டை வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், திரும்ப பெறவேண்டியும் நாளை (29-ந் தேதி) நடைபெற கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், லாட்ஜிகள், இனிப்பகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளை அடைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum