Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வான்வெளி ஆய்வில் இந்தியா இன்னும் முன்னேற வேண்டும் : மாதவன் நாயர்

View previous topic View next topic Go down

வான்வெளி ஆய்வில் இந்தியா இன்னும் முன்னேற வேண்டும் : மாதவன் நாயர்

Post  ishwarya on Fri May 24, 2013 4:44 pm

வான்வெளி தொழில் நுட்பத்தில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கியுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கவலை தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் தோவாளை லயோலா பொறியியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா நடந்தது. மத்திய அரசின் முன்னாள் செயலாளர் முத்துநாயகம் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் நிக்கோலஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் மாதவன் நாயர் கூறியதாவது: உலகளவில் வான்வெளி ஆய்வில் இந்தியா பின்தங்கியுள்ளது. எனவே இந்திய வான்வெளி விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றி காண வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். அதே நேரத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களும் அதிகம்.

மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இதற்கு பொறியியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் காரணமாகும். ஏனைய துறைகளில் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்கள் சுயதொழில், அரசு வேலை ஆகியவற்றிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அரசு பணிகளை மட்டும் சார்ந்திருப்பதை விட இளைஞர்கள் அவர்க ளுக்கு தெரிந்த, விரும்பும் தொழிலில் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது. இந்தியா இளைஞர்கள் தங்களின் சக்தியை தெரிந்து அதன் பாதையில் பயணிப்பது மகிழ்ச்சியை தருகிறது. சர்வதேச அளவில் இந்திய இளைஞர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்றாலும் அவர்கள் கற்ற கல்வியை இந்தியா மேன்மை அடையும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum