Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கஜமுகாசுர வதம்

View previous topic View next topic Go down

கஜமுகாசுர வதம்

Post  birundha on Sun May 26, 2013 3:46 pm


முன்னொரு காலத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன் ஒருவன் தோன்றினான். அவன் இறைவனிடத்தில் தன்னை யாரும் கொல்ல முடியாதபடி வரம் கேட்டான். அந்த அரிய வரத்தைப் பெற்றதன் காரணத்தினால் பலரைத் துன்பப்படுத்தி வந்தான்.

அதனால் அவனை கொல்வதற்காக இறைவன், ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை யானை (கஜம்) மூகத்தோடும், மனித உடலோடும் தோற்றுவித்தார். பிறகு அசுரனை வதம் செய்யும்படி அனுப்பி வைத்தார். விநாயகர் தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அக்கொம்பினால் அசுரனைக் கொன்றார்.

உடனே அசுரன் ஒரு பெருச்சாளி உருவம் தாங்கி விநாயகரை எதிர்த்துப் போரிட, விநாயகர் பெருச்சாளியை வென்று அதனைத் தன் வாகனமாக ஆக்கிக் கொண்டார்.

உடனே தேவர்களும் முனிவர்களும் மற்றும் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் துன்பங்களை அகலச் செய்த விநாயகப் பெருமானை சதுர்த்தி தினத்தன்று வழிபட்டு கஜமுகாசுரனுக்குத் தாங்கள் செய்யும் மரியாதைகளாக தலையில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணம் போடுதல் முதலிய கடமைகளைத் செய்யத் தொடங்கினார்கள்.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum