Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஜில்லாவில் அக்காவுடன் இணையும் தங்கை

View previous topic View next topic Go down

ஜில்லாவில் அக்காவுடன் இணையும் தங்கை

Post  ishwarya on Mon May 27, 2013 6:15 pm

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் நடித்த இஷ்டம் படத்தில் நாயகியாக நடித்தவர். முதல் படமே தோல்வி என்பதால் அதையடுத்து நிஷாவை கோடம்பாக்கம் கண்டுகொள்ளவில்லை. அதனால் தெலுங்குக்கு சென்று ஒரு படத்தில் நடித்தார். அந்த படமும் விசேஷமாக போகவில்லை.

அதனால், தங்கையை எப்படியாவது ஆளாக்கி விட வேண்டும் என்ற வெறியில் திரியும் காஜல், இப்போது தமிழில் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜில்லா படத்தில் இறக்கி விட்டுள்ளார். ஆரம்பத்தில் என் தங்கை சிறிய வேடத்தில் நடித்தால் அவரது இமேஜ் போய் விடும் என்று தயங்கிய காஜல், இப்போது தங்கை நிஷாவை அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

அதோடு, தற்போது மதுரையில் முகாமிட்டுள்ள அவர், தான் நடிக்கிற காட்சிகளைப்பார்த்து தங்கை பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக அவரையும் அழைத்து சென்றுள்ளாராம். அதனால் தனக்கு இப்போதைக்கு ஜில்லாவில் காட்சிகள் இல்லையென்றபோதும், அக்காள் நடிப்பை பக்கத்தில் இருந்தே பார்த்து வருகிறாராம் நிஷா.

அதோடு, தான் நடித்து விட்டு வந்த பிறகு, தான் நடித்தது போலவே தங்கையை நடித்துக்காட்டவும் சொல்லும் காஜல், ஜில்லா படத்தில் தங்கை நடிக்கும் காட்சிகளை முறையாக தான் பயிற்சி கொடுத்தே ஸ்பாட்டில் இறக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum