Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சிவகார்த்திகேயனுடன் நெருக்கமா? ப்ரியா ஆனந்த் விளக்கம்

View previous topic View next topic Go down

சிவகார்த்திகேயனுடன் நெருக்கமா? ப்ரியா ஆனந்த் விளக்கம்

Post  ishwarya on Mon May 27, 2013 6:29 pm

சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் நடிகை ப்ரியா ஆனந்த். தனுஷின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன்- ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் எதிர் நீச்சல். இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் எதிர் நீச்சல் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சந்திப்பில் படத்தின் நாயகன் சிவகார்த்திக்கேயன், கதாநாயகிகள் பிரியா ஆனந்த், நந்திதா, இயக்குனர் துரை செந்தில் குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பிரியா ஆனந்திடம், தங்கள் படங்களில் கதாநாயகிகளை சிபாரிசு செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு எந்த கதாநாயகனும் சிபாரிசு செய்யவில்லை என்பதால், அதுபற்றி கருத்து சொல்ல முடியாது என்றார்.

அடுத்து, சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக பழகுவதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரை விட்டு கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum