Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மணத்தக்காளி சூப்

View previous topic View next topic Go down

மணத்தக்காளி சூப்

Post  oviya on Sat Jul 13, 2013 8:41 pm

தேவையானவை:

மணத்தக்காளி கீரை - அரை கட்டு
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 3 பல்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
உப்பு - சுவைக்கேற்ப மிளகுத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து, "வெயிட்"டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றிவிட்டு குக்கரை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள். வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப். (விருப்பப்பட்டவர்கள் வெங்காயம் வதக்கும்போது, ஒரு தக்காளி சேர்க்கலாம்).
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum