Related Posts Plugin for WordPress, Blogger...

சீரகம் - மிளகு ஜீரணத்துக்கு ஓ.கே!

View previous topic View next topic Go down

சீரகம் - மிளகு ஜீரணத்துக்கு ஓ.கே!

Post  oviya on Sat Jul 20, 2013 8:17 pm

சீரகம் - 50 கிராம், மிளகு - 50 கிராம், தேவையான உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். சீரகத்தையும் மிளகையும் மிதமான சூட்டில், வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையும் ஒரு பிடி சேர்த்துக் கொள்ளலாம். ஆறியதும் மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வயிறு அப்செட்டாகும்போது எல்லாம், சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் அல்லது ஒன்றரை ஸ்பூன் இந்த மிளகு (Pepper) - சீரகப்பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடுங்கள். இப்படிச் சாப்பிடும்போது, நாக்கு பொறுக்கிற சூட்டில் வெந்நீரையும் குடித்தால், ஹம்மாடி, எத்தனை இதம் தெரியுமா?

பசிக்கவும் ருசிக்கவும் இஞ்சி!

சில பேருக்குப் பசியே எடுக்காது. (புண்ணியசாலிகள்!) எதைச் சாப்பிட்டாலும் ருசி தெரியாது. மண் மாதிரி இருக்கும். "நம்ம சமையல்தான் இப்படியோ?" என்று பயப்பட வேண்டாம்.

மிளகு(Pepper), சீரகப்பொடி சாதம் மாதிரியே, பிஞ்சு இஞ்சியையும், சீரகத்தையும் சிட்டிகை உப்பு, கொஞ்சம் புளி வைத்து அரைத்து, சாதத்தில் கலந்து சாப்பிட்டாலும், நாக்கின் சுவை நார்மலாக ஆகிவிடும்!

எலுமிச்சை டீ... டயரியாவுக்கு டாட்டா!

எந்த வயதினராக இருந்தாலும் சரி... விடாமல் வயிற்றுப்போக்கு இருந்தால், சட்டென நிறுத்த ஒரே வழி... லெமன் டீதான்!

டீ டிகாஷனை எடுத்துக் குளிர வைத்து அல்லது மிதமான சூட்டில் ஒரு மூடி எலுமிச்சை சாறு பிழிந்து "கப்"பெனக் குடியுங்கள். சர்க்கரை சேர்ப்பதும் சேர்க்காததும் அவரவர் விருப்பம். இதைவிடச் சிறந்த மருந்து டயரியாவுக்கு இல்லை... எந்தப் பக்க விளைவும் இல்லை!

மாதுளைத் தோல் மகா மருந்து!

மாதுளை சீசனில் பழத்தைத் தின்றுவிட்டு, தோலைத் தூக்கிக் கடாசுவீர்கள்தானே? இனி அதுபோல் செய்யாதீர்கள். வெயிலில் காயப் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகள், இளசுகள் எல்லாம்தான். இப்போது பீட்ஸா, பாவ்பாஜி, பேல்பூரி என்று "ஃபாஸ்ட் ஃபுட்(Fast Food)" மோகத்தில் அலைகிறார்களே... திடீரென வயிறு மக்கர் பண்ணுவது சகஜம். மப்பு சேர்ந்தால் காய்ச்சல் வரும். இதற்கெல்லாம் மாதுளம் பழத் தோலுடன் ஐந்தாறு கிராம்பு (லவங்கம்) சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

சுமார் 10 கிராம், மாதுளைத் தோல், 6 கிராம்பு, 2 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் இவ்விரண்டையும் போட்டு, கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் குளிரவைத்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவை அருந்தலாம்.

நீராகாரம் ஆஹா!

இன்று யாருமே நீராகாரத்தை நினைத்துப் பார்ப்பதில்லை. "கல்குடல்" என்று சிலரைச் சொல்வார்கள். எதைச் சாப்பிட்டாலும் "நம்பர் டூ" விஷயத்தில் கமுக்கமாக இருப்பார்கள். இரண்டு, மூன்று நாட்கள்... ஏன், பத்து நாட்கள்கூட ஸ்டாக் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.

மலச்சிக்கலுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், சிக்கல் இல்லாமல் இருக்க நீராகாரம் போல வேறு எதுவுமில்லை. முதல் நாளிரவே மிஞ்சியுள்ள சாதத்துக்குப் பச்சைத் தண்ணீரை ஊற்றுவதற்குப் பதிலாக, நாலு பங்குத் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஒரு பங்காகச் சுண்டவைத்து, அந்த நீர் குளிர்ந்த பிறகு சாதத்தில் விட்டு மூடி வையுங்கள்.

மறுநாள் விடியற்காலையில் காபி, டீ அருந்தும்முன், இந்த நீராகாரத்தில் தெளிவான நீரை மட்டும் எடுத்து, கொஞ்சம் கல் உப்பு போட்டுக் கரைத்து, 2 டம்ளர் ஆனந்தமாகக் குடியுங்கள். அப்புறம் தெரியும் இதன் மகிமை! சூரியன் உதிப்பதற்க்கு முன் குடிக்க வேண்டும். டயாபடீஸ்காரர்கள் மட்டும் தவிர்க்கவும்.

வயிற்றுக் கோளாறு நீங்க....

மாதுளம் பழத்தோல், சுண்டைக்காய், வெந்தயம், கறிவேப்பிலை (Curry Leaves), நெல்லிக்காய் (Gooseberry), மாம்பருப்பு - இவைகளைச் சம எடையில் எடுத்துக் காயவைத்து பவுடராக்கி, சலித்து வைத்துக் கொள்ளவும்.

எப்போது, வயிறு "கடாபுடா" என்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு டீஸ்பூன் தயிரில் ஒரு ஸ்பூன் பவுடரைக் கலந்து சாப்பிட்டால், ஸ்டிரைக் வாபஸ் பெற்ற அரசு ஊழியர்கள் மாதிரி வயிறு "கப்சிப்" ஆகி விடும்!

தலைவலி தீர....

ஒற்றைத் தலைவலி தீர சுடச் சுட ஜாங்கிரி சாப்பிடுவது கைகண்ட மருந்து! விளையாட்டில்லை. நிஜம்தான். வெகு நாள்பட்ட ஒற்றைத் தலைவலிகூட இந்த வைத்தியத்தில் சரியாகி விடுவதுண்டு.

ஜீராவில் அதிகம் ஊறாத ஜிலேபியை வாங்கி வைத்துக் கொண்டு, விடிகாலையில் அதில் ஒன்று அல்லது இரண்டை எடுத்து மைக்கேரா அவனிலோ அல்லது குக்கர் பாத்திரத்திலோ வைத்து, வெதுவெதுப்பாக சூடாக்கி, வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

மூன்று நாள் இந்த வைத்தியத்தைத் தொடர்ந்தால், "தலைவலியா... யாருக்கு?" என்று கேட்பீர்கள். சர்க்கரை நோய்க்காரர்கள் இதை முயற்சிக்க வேண்டாம்.

செம்பருத்திப்பூ மருந்து!

ஒற்றைத் தலைவலிக்கு நல்ல சிவப்பில் அடுக்கடுக்காய் பூக்கும் செம்பருத்திப்பூ மிகவும் உபயோகரமானது.

ஐந்நூறு பூக்களை எடுத்து சட்டியில் போட்டு, பூக்கள் முங்குகிற அளவுக்கு நல்லெண்ணெயை விட்டு காய்ச்சி, ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலைவலி பறந்து போகும்.

பின் தலை சுளுக்கு புளியினால் போச்சு...

பின்கழுத்து, தலையின் கீழ்ப்பகுதி, தோள்பட்டை இவைகளில் சுளுக்கு ஏற்பட்டோ, சதை புரண்டோ வலிக்கும். கம்ப்யூட்டர் அடியிலேயே உட்கார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற சுளுக்கும், வலியும் ஏரளாம்.

சாதாரணமாய் வீட்டில் சமைக்கும் புளியையும், உப்பையும் தண்ணீர் விட்டு கரைத்து, நன்றாக காய்ச்சி, குழம்பு பதம் வரும்போது, (ஜாக்கிரதை... கடுகு, மிளகாய் தாளித்துவிடாதீர்கள்) இறக்கி, பொறுக்கிற சூட்டில் எடுத்து, வலியுள்ள பிரதேசத்தில் தடவி விடவும்.

மண்டையிடியா... மல்லிகைப்பூ பற்று!

தலையை உயர்த்த முடியாத அளவுக்கு சம்மட்டியால் அடிப்பது போல மண்டையிடித்தால் ஒரு பிடி மல்லிகைப்பூவில் இரண்டு டீஸ்பூன் மஞ்சள் பொடியையும் கலந்து அரைத்து, தலைவலி பிரதேசத்தில் பற்று போட்டால் தலைவலி போய் மல்லிகைப்பூவாய் சிரிப்பீர்கள்.

oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum